வாகன திருத்தும் நிலையத்தில் பெருமளவான எரிபொருள் மீட்பு.!

வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள வாகன திருத்தும் நிலையத்தில் பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

வாகன திருத்தும் நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான எரிபொருள்களினை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதன் போது சுபப்ர் டீசல் 900 லீற்றர், டீசல் 600 லீற்றர் மற்றும் பெற்றோல் 400 லீற்றர் கைப்பற்றப்பட்டது

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை