மொனராகலை பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் ஒருவர், 50,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (2026.03.29)ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு வர்த்தகர்களிடம் இறைச்சிக் கடை மற்றும் பொது மலசலக்கூட பராமரிப்பு குறைபாடுகளை மறைப்பதற்கும், செலுத்த வேண்டிய குத்தகை நிலுவைகளைச் செலுத்த கால அவகாசம் வழங்குவதற்கும் குறித்த அதிகாரி ரூ. 100,000 இலஞ்சம் கோரியுள்ளார்.
முன்னதாக 10,000 ரூபாயைப் பெற்றிருந்த அவர், எஞ்சிய தொகையில் 50,000 ரூபாயைப் பெறும்போது மொனராகலை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.