புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (13.03.2026) ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ்.சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.