செட்டிபாளையம் கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்- குடியிருப்புக்கள் மற்றும் பயன்தரும் மரங்கள் சேதம்!

​மட்டக்களப்பு மாவட்டம்
​களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்திற்குள் இன்று(04.03.2026)ஆம் திகதி  அதிகாலை புகுந்த காட்டு யானைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்துள்ளன.


நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று(03.03.2026) செட்டிபாளையம் களப்புப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் வருகை தந்திருந்தன.

 நேற்று பகல் முழுதும் அப்பகுதியிலேயே தங்கியிருந்த இந்த யானைகள், மாலை வேளையில் அண்டைய கிராமமான குருக்கள்மடம் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த மக்களின் சொத்துக்களுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தின.

அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை மீண்டும் செட்டிபாளையம் கிராமத்திற்குள் ஊடுருவிய அந்த இரண்டு காட்டு யானைகளும், மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தன.

இதன்போது
​வீடுகளின் மதில்கள் மற்றும் வேலிகள் யானைகளால் உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன.
​வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்கள் முறித்து அழிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தக் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 "யானைகளின் இந்தத் தொல்லைகளுக்கு என்றுதான் நிரந்தரத் தீர்வு கிடைக்குமோ?" எனப் கவலையுடன் கேள்வி எழுப்பும் அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடி கவனம் செலுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதியது பழையவை