இன்று (05.03.2026)அதிகாலை 5.45 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நில அதிர்வு, ரிச்டர் அளவுகோலில் 4.9 அளவாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி 43.55 பாகை வடக்கு அகலாங்கிலும் 86.12 பாகை கிழக்கு நீளாங்கிலும் அமைந்துள்ளதாகவும் ஆரம்பக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிர் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.