ஈரானில் இருந்து எம்மால் எரிபொருளை பெறமுடியாது - நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கைக்கு எரிபொருள் வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் கருத்து வெளியிட்டது தொடர்பில்  அமைச்சரவை ஊடக சந்திப்பில்  கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  
 
ஈரான் தூதுவரின் கருத்தினை  வரவேற்ற அமைச்சர் அதேவேளையில், கப்பல்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன் உள்ளது என்றும், ஆனால் நமது நாட்டிற்கு அந்த வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

அவரது கருத்துக்கு  நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனாலும் நாங்கள் இப்போது கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்காகப் பல ஓடர்களை ஏற்கனவே வழங்கியுள்ளோம். அதற்கான ரெண்டர் திறக்கப்பட்டுள்ளது,  அந்த எண்ணெயை நாங்கள் பெறுவோம் என்று நம்புகிறோம்.  

இன்று ஒரு டெண்டர் திறக்கப்பட உள்ளது. தற்போது திறந்திருக்கும் ரெண்டரின்படி, ஏப்ரல் மாதத்தில் பல எண்ணெய் கப்பல்கள் பெறப்படும். இவற்றைக் கொண்டு, எண்ணெயின் அளவை நிர்வகிக்க வேண்டியிருக்கும் என்றார்.

ரஷ்யாவுடன் பேச்சு 

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் ராஜதந்திர மட்டத்தில் நடைபெற்று வருகின்றன, ஆனால் கடந்த காலத்தில் நம்மால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெற முடியவில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இதைச் சாதிக்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். 

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கைக்கு வருகை தர உள்ளார். அதன் பிறகு, இந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
புதியது பழையவை