கணித ஒலிம்பியாட் போட்டியில் மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை.!

​2026ஆம் ஆண்டிற்கான கணித ஒலிம்பியாட் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் பெரும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

​இப்போட்டியில் பங்குபற்றி மாவட்ட மட்டத்தில் வெற்றியீட்டியதன் மூலம், மாகாண மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்களான
​ த.நதுஜன்,
​கு.கபிஷானன்
​த.துர்ஷாந்த்
​ஆகியோர்  (2026-03-04) ஆம் திகதி  புதன்கிழமை காலை பாடசாலை ஒன்றுகூடலின் போது கௌரவிக்கப்பட்டனர்.

வித்தியாலய முதல்வர்  அ.கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் இந்த வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை ஆசிரியர்களான திருமதி சஜிக்கா மிதுஷன் மற்றும் திருமதி சுஜானா கவிப்பிரசாந்த் ஆகியோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

​மேலும், மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சுயமாக முன்வந்து மேலதிக பயிற்சிகளை வழங்கிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்  சி.சிவநந்தன் அவர்களின் தன்னார்வத் தொண்டும் இதன்போது சிறப்பாகப் பாராட்டப்பட்டது.

​மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இந்த மாணவர்களுக்கு வலயக் கல்விச் சமூகம் மற்றும் ஊர் மக்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
புதியது பழையவை