மட்டக்களப்பு, மண்முனைப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள தீவுப் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (12.03.2026)ஆம் திகதி காலை அதிரடியாகச் சுற்றிவளைத்துள்ளனர்.
இச் சுற்றிவளைப்பின் போது பாரியளவிலான கசிப்பு மற்றும் உற்பத்தி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டவை:-
1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு, 2 பாரல்கள், 2 கலன்கள், 1 கேஸ் அடுப்பு, 1 கேஸ் சிலிண்டர் மற்றும் 2 சுத்துப் பைப்புகள்.
தாளங்குடா மற்றும் மாவிலங்கத்துறை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய நபர்கள்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, பதில் கடமை நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜோய் தலைமையிலான குழுவினர் இச் சோதனையை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.