மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராமத்தில் உள்ள கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களுக்கும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.
தளவாய் கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மீனவ கூலித் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது, கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் தொழிலாளர்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி.
கடற்கரைப் பகுதிகளில் தொழில் செய்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைபாடு.
மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பால் தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புகள்.
தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்த பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், அவர்களின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
பாரம்பரியமான கரைவலைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இச்சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.