இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் புதிய பஸ்கள் வருகை.!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தாழ் தளப் பேருந்துகள் (Low Floor Buses) இலங்கைக்கு வந்துள்ளன. 

முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்காக இந்தப் பேருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் இலகுவான அணுகல், மேம்பட்ட வசதி மற்றும் சௌகரியத்தை வழங்கும் வகையில் இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து வலையமைப்பை நோக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

நவீன, நம்பகமான மற்றும் பயணிகளுக்கு ஏற்ற போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு ஆதரவளிக்க எதிர்பார்ப்பதாக இந்த பேருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்துள்ள இந்திரா டிரடர்ஸ் கூறியுள்ளது. 

இலங்கையின் பொதுப் போக்குவரத்திற்கான சிறந்த எதிர்காலத்தை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிப்போம் என்றும் இந்திரா டிரடர்ஸ் அழைத்துள்ளது.
புதியது பழையவை