இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன்  காலி , மாத்தறை,கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 


ஹம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் 

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு  அத்துடன் மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை