இலங்கை மத்திய வங்கி இன்று (19.03.2026) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சரிவைச் சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 315 ரூபாய் 12 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபாய் 18 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 363 ரூபாய் 32 சதம்.
சமீபகாலமாக நிலவி வரும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றது.