மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பகுதியில் இன்று (01.04.2026)காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது
மயிலம்பாவெளி, விபுலானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ம.ரயூவன் (11 வயது) என்ற சிறுவனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இன்று (01.04.2026) காலை 8 மணியளவில், மயிலம்பாவெளி பிரதான வீதியூடாக வீதியை கடந்து கோயிலுக்குச் செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுவன் வீதியைக் கடக்க முயன்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.