பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவு - போரதீவுப்பற்றில் மலரஞ்சலியுடன் ஆரம்பமான எழுச்சிப் பவனி!

​மட்டக்களப்பு மண்ணில் நீதிக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (18.04.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன.

​மலர் தூவி ஆரம்பமான நினைவூர்திப் பவனி
​இன்று காலை மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கின. 
அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை பூபதியின் திருவுருவம் தாங்கிய நினைவூர்திக்கு, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உணர்வாளர்கள் மலர் தூவி, சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

​மக்களின் கௌரவத்துடன் தொடரும் பயணம்
​மக்களின் அஞ்சலிக்காகப் புறப்பட்ட இந்த நினைவூர்தியானது, தற்போது பின்வரும் கிராமங்களின் ஊடாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

​மண்டூர்,
​வெல்லாவெளி,ஆகிய வீதி ஊடாக 
​நினைவூர்தி கடந்து செல்லும் வீதியெங்கும் பொதுமக்கள் திரண்டு நின்று, தியாகத்தாய்க்குத் தமது கௌரவத்தை அஞ்சலியாகச் செலுத்தி வருகின்றனர். 

​நாளை (19.04.2026)நிறைவடையும் நினைவேந்தல்
​வடகிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளையும் தழுவி ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவூர்திப் பவனியானது, மாவட்டத்தின் முக்கிய இடங்களைக் கடந்து நாளை (19.04.2026) உத்தியோகபூர்வமாக நிறைவு பெறவுள்ளது.

​"மண்ணின் விடுதலைக்காகவும், நீதிக்காகவும் அறப்போராட்டம் நடத்தி உயிர்நீத்த அன்னை பூபதியின் தியாகம், 38 ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்பதற்கு இன்றைய மக்கள் எழுச்சியே சான்று.

புதியது பழையவை