இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் அதாவது 20 ம் திகதி முதல் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது.

கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென்  மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன்  நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 


மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி  ஊடாக ஹம்பாந்தோட்டை   வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை