​களுவாஞ்சிகுடியில் அதிரடி - 57 கிலோ அழுகிய கோழி இறைச்சி மீட்பு - வியாபாரிக்கு எதிராக வழக்கு.!

​மட்டக்களப்பு மாவட்டம் 
களுவாஞ்சிகுடி பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2026) ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

​களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றில், ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
​இதன்போது, குறித்த கடையின் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நேரம் இறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த கோழிகளின் இறைச்சி, மக்களுக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்தமை கண்டறியப்பட்டது.

​சுகாதாரப் பிரிவின் அதிரடி...

களுவாஞ்சிகுடி பிரிவுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த. கஜானன் தலைமையிலான குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட 57.5 கிலோ இறைச்சியும் பொதுமக்களின் சுகாதார நலன் கருதி உடனடியாக அழிக்கப்பட்டது.

​சம்பந்தப்பட்ட வியாபாரிக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தலைமறைவாக உள்ள வியாபாரியைக் கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கஜானனின் செயல்பாட்டைப் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

​பண்டிகைக் காலங்களில் இலாப நோக்கத்திற்காகத் தரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதாரப் பிரிவினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை