மட்டக்களப்பு பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கைவிஷேட வைபவம்.!

மலர்ந்திருக்கின்ற "பராபவ"வருட சித்திரை புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, மட்டக்களப்பு - பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படியான கைவிஷேட வைபவம் இன்று (15.04.2026) புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

​வாக்கிய பஞ்சாங்க முறைப்படி, இன்று காலை 9 மணி 04 நிமிடத்திற்கு அமைந்த சுப நேரத்தில் கைவிஷேடம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.

ஆலயத் தலைவர் திரு. கி. கெங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆலயப் பிரதம குருக்கள் சிவஸ்ரீ. ப. கண்ணன் குருக்களினால் சைவ பக்த மெய்யடியார்களுக்கு கைவிஷேடம் வழங்கி ஆசி வழங்கப்பட்டது.

​புத்தாண்டு பிறப்பினைத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு குருக்களிடம் கைவிஷேடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை