இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிரதேசங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ  மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 
**************************

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை   வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை