மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்து.!

​மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் நேற்று (18.04.2026) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வாகனம் ஒன்று பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

​​மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில் நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
​திருமண ஜோடி ஒன்றினை ஏற்றிக்கொண்டு ஏறாவூர் நோக்கி பயணித்த வாடகை கார் ஒன்று, அதே திசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

​மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்தின் தாக்கத்தினால் திருமண ஜோடி பயணித்த கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியது. மோட்டார் சைக்கிள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

​சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த சந்திவெளி போக்குவரத்து பொலிஸார், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை