மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவசாய தோட்டப் பகுதியில் இன்று(19.4.2026)ஆம் திகதி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் (காந்தன்) எனப்படும் 60 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் நேரில் சென்று முதற்கட்ட விசாரணைகளையும், கள ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
கொலையாளிகளை அடையாளம் காணவும், சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யவும் பொலிஸார் தற்போது தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியே உயிரிழந்திருக்கலாம் என அருகில் உள்ள மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள போதிலும், பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னரே இது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் சம்பவம் நடை பெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.