ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்திய அமைதிப்படைகளை தாயகத்தைவிட்டு வெளியேற வேண்டுமென அன்னை பூபதி மட்டக்களப்பில் நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தமை குறிப்பிடத்தக்கது.