மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் -பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.!

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7 வது ஆண்டு நினைவேந்தல் இன்று(21.04.2026) காந்திபூங்கா, மற்றும் கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகளில் பாலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

2019ம் ஏப்பில் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினுள் பயங்கவராத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தனர்.

இதன்படி இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9.05 மணிக்கு ஆரம்பமானது.


காந்தி பூங்கா,
இதில் மட்டு சீயோன் தேவாலயத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் மலர்தூவி சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தியதாக எமது பிராதந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


இதேவேளை காந்தி பூங்காவில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் மட்டு மாநகரசபை உறுப்பினர்கள் தலைமையில் நீனைவேந்தல் இடம்பெற்றது.
இதில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் வைத்து மெழுகுவர்தி ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனை தொடரந்து கிறிஸ்தவ வணபிதாக்கள் அருட்சகோதரிகள், மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர் வைத்து சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியதாக  எமது பிராதந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புதியது பழையவை