அண்மையில் காலமான கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு ஊடக மையமும், கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நினைவு அஞ்சலி நிகழ்வு, நேற்று (04.04.2026) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுநிலை அதிபருமான செல்லையா பேரின்பராஜா தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மறைந்த ஊடகவியலாளர் சலீம் அவர்களின் உருவப்படத்திற்கு முன்பாக அகல்விளக்கேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்னாரின் ஊடகப் பணி மற்றும் சமூகம் சார்ந்த பங்களிப்புகள் குறித்து நினைவு கூரப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோ. கருணாகரன் (ஜனா) மற்றும் பா. அரியநேத்திரன்,
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம்,
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ். லோகநாதன்,
ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ. சுகுமாரன்
மேலும், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.எஸ். நூர்தீன், எஸ். நிலாந்தன், கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கத் தலைவர் வா. கிருஷ்ணகுமார், ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் இ. தேவ அதிரன் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களும், அன்னாரின் புதல்வர் அக்கீல் ஆகியோரும் நினைவு அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். நிலாந்தன் தொகுப்புரையையும், நன்றியுரையையும் வழங்கினார்.