மட்டக்களப்பின் கலை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள ஓவியக் கலைஞர் தங்கேஸ்வரன் விக்னேஸ்வரனின் ‘படையல்’ எனும் தனிநபர் காண்பியக் கலைக்காட்சி இன்று (24.04.2026)ஆம் திகதி மட்டக்களப்பில் மிக விமரிசையாக ஆரம்பமானது.
கலைநிகழ்வுகளுடன் கூடிய தொடக்க விழா
மட்டக்களப்பு புதிய வீதியில் அமைந்துள்ள ‘கூடம்’ கலையகத்தில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வு, பழங்குடி மக்களின் பாரம்பரிய கலைப்பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய வாழ்த்துப் பாடல் மற்றும் அதிரும் கொட்டுப் பறையிசையுடன் கலைக்காட்சி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் பண்பாடு மற்றும் இயற்கை சார்ந்த வாழ்வியலைத் தூரிகை வழிப் பதிவு செய்யும் நோக்கில் இந்த ஓவியக் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டக்களப்பின் கலை வரலாற்றில் ஒரு முக்கிய பதிவாகவும், பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கான ஒரு களமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக இரவு 7.00 மணி வரை இக்கண்காட்சி திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.