மட்டக்களப்பு ஆரையம்பதியில் கோர விபத்து -முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், ஆரையம்பதி பகுதியில் இன்று (24.04.2026) இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் பயணித்த லொறி ஒன்று, அதே திசையில் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஆரையம்பதி, செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த சின்னக்குட்டி என அழைக்கப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புதியது பழையவை