மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள "தயா லிக்கர் ஷாப் " (Thaya Liquor Shop) முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளிய சம்பவம் இன்று (23.04.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது
லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளன.
அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சாரதியின் கவனக்குறைவு அல்லது தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமானதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.