அம்பாறை, தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராலந்த பகுதியில் த்ரிவீலர் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்தின் கீழ் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.
இன்று (14.04.2026) குறித்த த்ரிவீலர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த போக்கணையினுள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயற்பட்டு, காயமடைந்த சாரதியை ஆம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.