மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம்(14.04.2026) புதிய பராபவ தமிழ் வருடத்தில் ஆலயத்தில் விசேட அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் புடைசூழ ஆலயத்தில் எம்பெருமானுக்கு விசேட பூஜைகளும் இடம்பெற்றது.
நாளைய தினம் (15.04.2026) எமது ஆலயத்தில் ஆலய தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஆலய பிரதம குருக்களினால் கைவிசேடம் வழங்கப்படும். என்பதனை சகல பக்த அடியவர்கள் அனைவருக்கும் அறியத்தருவதோடு அனைத்து இந்துவாழ் பக்தர்களையும் வருக வருக வருக என அன்புடன் அழைக்கின்றனர்.