இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று  மதியம் சுமார் 12.13 மணியளவில் பேருவலை , குறுளுவெத்த, றக்வான, கொடகவெல, உடவளவ, மற்றும் தனமல்வில போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

வடக்கு, கிழக்கு , வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மாகாண கரையோரப் பிரதேசங்களிலும் அத்துடன் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 


காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 25 - 35 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40  - 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை