​கொழும்பில் தமிழ் அரசியல் கட்சிகள் அவசர சந்திப்பு - சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு.!

​கொழும்பில் உள்ள ஹோட்டல் ஜானகியில் இன்று (09-04-2026) மாலை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

​தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இக்கலந்துரையாடலில், இலங்கையின் முன்னணி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

​ஒற்றுமைக்கான முயற்சி....

சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளை பொதுவான ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைப்பதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது.

​அரசியல் சவால்கள்:-

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் மற்றும் எதிர்காலத் தேர்தல்களில் கையாப்பட வேண்டிய வியூகங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.

​சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்களிப்பு:-

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சட்ட ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் முன்னகர்த்துவதற்கான ஆலோசனைகளை சட்டத்தரணிகள் சங்கம் இதன்போது முன்வைக்கவுள்ளது.

​தற்போது நடைபெற்று வரும் இக்கூட்டத்தின் நிறைவில், கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாடுகள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகரில் நடைபெறும் இச்சந்திப்பு தமிழ் அரசியல் பரப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை