ஹோர்முஸ் கடலில் அமெரிக்கா முற்றுகை!

ஈரானுடனான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே அமைந்துள்ள முக்கிய கடற்பரப்புகளில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் 'கடற்படை முற்றுகை' (Naval Blockade) விதிக்கப்படுவதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 ஹோர்முஸ் நீரிணைக்கு  கிழக்கே அமைந்துள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் இந்த முற்றுகை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பலாக இருந்தாலும், அவை இந்த கடற்பரப்பினூடாக பயணிக்கும் போது இந்த முற்றுகை விதிகளுக்கு உள்ளாகும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

 உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் கடல்சார் வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், உலக நாடுகள் இந்த நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

புதியது பழையவை