மட்டக்களப்பு தாண்டியடியில் கோர விபத்து .! ஜீப் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் இன்று (13.04.2026) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 62 வயதுடைய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

இன்று மாலை 7 மணியளவில் தாண்டியடி பிரதான வீதியில் அமைந்துள்ள பருத்திச்சேனை சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மீது, அதே திசையில் வந்த ஜீப் வண்டி ஒன்று பலமாக மோதியுள்ளது. 


இந்த விபத்தின் கோரத்தினால் குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்தில் புது மண்டபத்தடி, தாண்டியடி கிராமத்தைச் சேர்ந்த மார்ட்டின் கிஷ்ணபால (யோகராஜா) வயது (62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை