புகையிரதத்துடன் கார் மோதி கோர விபத்து.!

கிளிநொச்சி - முறிகண்டி பகுதியில் இன்று (16.04.2026) புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.


முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள புகையிரதப் பாதையை கார் ஒன்று கடக்க முற்பட்ட வேளையில், அதே திசையில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் எதிர்பாராத விதமாக மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற உடனேயே அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவிப் பிரிவினர் இணைந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 

விபத்தின் போது காயமடைந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக அப்பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை