வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கு முஷ்லிம் மக்கள் ஆணைதரவில்லை என்ற வரலாற்றை அறிவோம்..!
வட்டுக்கோட்டை தீர்மானம் வட்டுக்கோட்டை தொகுதியில் பண்ணாகம் எனும் ஊரில் 1976, மே,14, ல், தந்தை செல்வாவால் நிறைவேற்றிய தீர்மானம் இந்த தீர்மானம் நிறைவேற்றி சரியாக 11, மாதம்,12, நாட்களால் 1977, ஏப்ரல், 26, தந்தை செல்வா மரணித்தார். தந்தை செல்வா மரணித்து 02, மாதம்,25, நாட்களால் இலங்கையின் 08, வது நாடாளுமன்ற தேர்தல் 1977, யூலை,21.ல் இடம்பெற்றது. அதுதான் தொகுதிமுறையிலான இறுதித்தேர்தல் இந்த பொதுத்தேர்தலில்தான்
வட்டுக்கோட்டை தீர்மானத்தை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிறுத்தி வடகிழக்கு தமிழ்பேசும் மக்களிடம் அங்கீகாரம் பெறும் தேர்தலாக தமிழர் விடுதலை கூட்டணியினர் வடகிழக்கில் 24, தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டது.
இறுதியில் 23, தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. புத்தளம் தொகுதியில் டாக்டர் இலியாஷை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டபோதும் இறுதியில் அவர் பின்வாங்கினார்.
முஷ்லிம் வேட்பாளர்கள் 03, தொகுதிகளில் நிறுத்தப்பட்டனர்.
1).கல்முனை, ஏ. எம். சம்சுதீன்
2).சம்மாந்துறை, எச். எல். எம். ஹாசீம்
3).மூதூர்,எஸ். எம். மக்கீன்
இந்த மூன்று தொகுதிகளிலும் மூன்று முஷ்லிம் வேட்பாளர்களும் அடைந்தனர், ஐக்கிய தேசிய கட்சியே மூன்று தொகுதியிலும் வெற்றிபெற்றது.
கல்குடா தொகுதியிலும் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட சம்மந்தமூர்த்தி தோல்வியடைந்தார் ஐக்கிய தேசிய கட்சி கே.டவிலியூ.தேவநாயம் வெற்றிபெற்றார் அவர் வெற்றிபெற்றதும் முஷ்லிம் மக்களின் வாக்குகளே காரணம்.
பிரதான பிரசார பீரங்கி என இந்த தேர்தலில் புகழாரம் சூட்டப்பட்ட சட்டத்தரணியும், பின்னாளில் 1981, ல் ஶ்ரீலங்காமுஷ்லிம் காங்கிரஷ் கட்சியின் ஸ்தாபக தலைவராக மாறியவருமான எம்.எச்.எம்.அஷ்ரப் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முதன்மைப்படுத்தி மேடையில் பேசினார் அவருடைய பேச்சு “ தந்தை செல்வா பெற்றுத்தராத தமிழீழத்தை அஷ்ரப்பாகிய நான் பெற்றுத்தருவேன்”
இப்படியே அவரின் பேச்சு அமைந்தது.
ஆனால் அவரால் அவருடைய கல்முனை தொகுதியில்கூட வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏ.எம்.சம்சுதீனைக்கூட வெற்றிபெறவைக்கவில்லை.
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு 18, தமிழ் தொகுதிகளில் மட்டுமே அங்கீகாரம் கிடைத்தது.(மொத்த வாக்குகள்: 421,488)
வெற்றி பெற்ற தொகுதிகளும், உறுப்பினர்களும்:
01).காங்கேசன்துறை, அ.அமிர்தலிங்கம்•
02).யாழ்ப்பாணம், வி.யோகேஷ்வரன்•
03).நல்லூர்,மு.சிசிதம்பரம்•
04).ஊர்காவல்துறை, க.பொ.இரத்தினம்•
05).வட்டுக்கோட்டை, தா.திருசாவுக்கரசு•
06).கோப்பாய், சி.கதிரவேற்பிள்ளை•
07).உடுவில்,மு.தர்மலிங்கம்• 08).உடுப்பிட்டி,த.இராசலிங்கம்•
09).பரித்தித்துரை, கே.துரைரெட்ணம்•
10).சாவகச்சேரி, வி.என்.நவரெட்ணம்• 11).கிளிநொச்சி, வீ.ஆனந்தசங்கரி•
12).முல்லைத்தீவு, எக்ஷ்.எம்.செல்லத்தம்பி•
13).மன்னார்,பீ.ஏ.சுசைதாசன்•
14).வவுனியா,தா.சிவசிதம்பரம்•
15).திருகோணமலை, இரா.சம்மந்தன்•
16). மட்டக்களப்பு,இரட்டை தொகுதி செ.இராசதுரை.
17).பட்டிருப்பு, பூ.கணேசலிங்கம்•
18).பொத்துவில், எம். கனகரெத்தினம்•
எந்த ஒரு முஷ்லிம் தொகுதிகளிலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதும் வரலாறு..
முஷ்லிம் மக்கள் அங்கீகாரம் தராமைக்கான காரணம் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி இருவரை வேட்பாளராக இறக்கியதே காரணம் கவிஞர் காசி ஆனந்தன் இலங்கை தமிழரசு கட்சி சின்னமான வீட்டு சின்னத்திலும், செல்லையா இராசதுரை தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்திலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி இருவரையும் போட்டியிட வைத்தபோதும் காசி ஆனந்தன் தோல்வி கண்டார் செல்லையா இராசதுரை வெற்றிபெற்றார்.
மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதிக்கான காரணம் ஒரு தமிழரும், ஒரு முஷ்லிம் உறுப்பினரும் காத்தான்குடியில் இருந்து முஷ்லிம் பிரதிநிதி ஒருவர் தெரிவாகவேண்டும் என்பதனாலேயே இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அது இயங்கியது.
அதனை அறிந்திருந்தும் இரண்டு தமிழர்களை வேட்பாளராக தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட வைத்து முஷ்லிம் பிரதிநித்துவத்தை தட்டிப்பறிக்கிறார்கள் என்ற பிரசாரத்தை ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு, கல்முனை, சம்மாந்துறை. மூதூர் ஆகிய தொகுதிகளில் மேற்கொண்டனர் அந்த பிரசாரம் முஷ்லிம் மக்கள் மத்தியில் தீவிரமாக எடுபட்டது. ஐக்கியதேசிய கட்சி கையில் எடுத்த பிரசாரம் “ தமிழீழம் கேட்பவர்கள் மட்டக்களப்பில் முஷ்லிம் பிரதிநித்துவத்தை தட்டிப்பறிக்கிறார்கள்” இப்படித்தான் அவர்களுடைய பிரசாம் முஷ்லிம் தொகுதிகளில் இருந்தது. அதனால் எந்த ஒரு தொகுதியிலும் தமிழர் விடுதலை கூட்டணியால் போடப்பட்ட முஷ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியால் நிறுத்தப்பட்ட மூன்று தொகுதியும் வெற்றிபெற்றது.
எம்.எச்.எம்.அஷ்ரப் 1977, தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்காக பிரசாரம் செய்தவர் தேர்தல் முடிந்த கையோடு அவர் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து விலகி 1981, ல் முஷ்லிங்களுக்கான தனியான அரசியல் கட்சியாக முதல் முதலாக ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் கட்சியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..!
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு இன்று 50, வது ஆண்டு விழா காணும் நாளில் கடந்த கால வரலாறுகள் அறியப்படவேண்டியவை..!
-பா.அரியநேத்திரன்.
14/05/2026