மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் இன்று (26.05.2026) காலை தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், லொறி இரண்டாகப் பிளந்து முற்றிலும் சிதைவடைந்துள்ளதுடன், அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனையில் இருந்து கதுருவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, சித்தாண்டி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லொறியுடன் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது லொறியில் பயணித்தவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறி முற்றிலும் உருக்குலைந்துள்ள அதேவேளை, தனியார் பேருந்தும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார், விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, அதிக வேகம் மற்றும் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.