மட்டக்களப்பில் அதிவேகத்தால் விபத்து.! மோட்டார்சைக்கிள் வாய்க்காலுக்குள் வீழ்ந்து இளைஞன் படுகாயம்.!

மட்டக்களப்பு, வவுனதீவு காஞ்சிரங்குடா பகுதியில் இன்று (16.05.2026)காலை இடம்பெற்ற பயங்கர மோட்டார்சைக்கிள் விபத்தில் முதலைக்குடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

​இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது.

​முதலைக்குடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காஞ்சிரங்குடா வீதியூடாக அதிக வேகத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார். 

இதன்போது, எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் இருந்த மதகு (Culvert) ஒன்றில் பலமாக மோதியுள்ளது.

​மோதுண்ட அதிர்வில் மோட்டார்சைக்கிளும், அதனைச் செலுத்திச் சென்ற இளைஞரும் அருகில் இருந்த நீரோடும் வாய்க்காலுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

​விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​விபத்தின் தாக்கத்தினால் மோட்டார்சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.

​அதிவேகமாக மோட்டார்சைக்கிளைச் செலுத்தியமையே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் குறித்து வவுனதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை