அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகள் இன்று(20.05.2026) மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பாவிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேக ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாக காணப்பட்டதுடன் அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மீட்க்கப்பட்டுள்ள குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படை பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.