மூதூர் -கடற்கரைச்சேனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் -கடற்கரைச்சேனை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வை கடற்கரைச்சேனை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை