கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது.!

நேற்று (11.05.2026)முதல் பெய்த கடும் மழை காரணமாக, வெல்லாவெளியிலிருந்து மண்டூருக்கு பயணிக்கும் பிரதான வீதி இன்று(12.05.2026) பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதனால் அந்த பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அந்த வீதியூடான போக்குவரத்து தற்போது முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் வீதிகள் சேதமடைந்துள்ள நிலையில், மண்டூர் மற்றும் அதனை அண்டிய பகுதி மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
புதியது பழையவை