அஸ்வெசும பயனாளிகளுக்கு தமிழ் - சிங்கள புத்தாண்டுக்காக வழங்கப்பட்ட விசேட நிவாரணக் கொடுப்பனவின்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 49,000 பேருக்கு இரட்டைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
வங்கிக்கு அனுப்பப்பட்ட கோப்புகளில் ஒன்று இரு முறை பதிவேற்றப்பட்டதால் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு தவறுதலாக மேலதிக பணத்தைப் பெற்றுக்கொண்ட 49,759 பயனாளிகள் ஏற்கனவே பணத்தை எடுத்துவிட்டதால் இதனால் 248,795,000 ரூபா பணம் மே மாத அஸ்வெசும கொடுப்பனவின்போது மீளப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தவறு உடனடியாகக் கண்டறியப்பட்டு நிதி மீளப் பெறப்படுவதால், அரசாங்கத்துக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என சபை தெளிவுபடுத்தியுள்ளது.