நாட்டில் 2026 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர இன்று (04.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 12 வயதிற்கு குறைந்த இரண்டு சிறுவர்கள் அடங்குவதாகவும் அவர்களின் மரணங்கள் கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 25,846 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நிலவி வரும் இடைவிடாத மழைவீழ்ச்சி மற்றும் நுளம்புகள் பெருகுவதற்கு சாதகமான சூழல் காணப்படுவதால், டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நீர் தேங்கி நிற்கும் இடங்கள் நுளம்பு உற்பத்தித் தளங்களாக மாறுவதால் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வைத்தியர் மேலும் சுட்டிக்காட்டிள்ளார்.