வெளிநாட்டவருக்கு வீடு வாடகைக்கு விடுவதாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்.!

வெளிநாட்டவர்களுக்கு வீடு அல்லது சொத்துக்களை வாடகை அடிப்படையில் வழங்குவதாயின், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U.வுட்லரினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா மூலம் இலங்கை வரும் சில வெளிநாட்டினர், இவ்வாறான வாடகை வீடுகளில் தங்கியிருந்து பல்வேறு இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன. 

அதற்கமைய, வெளிநாட்டினருக்கு தங்களது வீடுகள் அல்லது தங்குமிட வசதிகளை வழங்கும் நபர்கள், இனிவரும் காலங்களில் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை