மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் காட்டு யானை அட்டகாசம் - நான்கு பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழப்பு.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02.05.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

​சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய தயானந்தராஜா வசந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நான்கு பிள்ளைகளின் தாயான இவர், இன்று அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் நின்றபோது, அங்கு நுழைந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.

​இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

​இச்சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதியது பழையவை