அம்பாறையில் சோகம் - பள்ளிவாசலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மோதி 9 வயது மாணவன் உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 9 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

​பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.

​இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்ற அறூஸ் ஹமூத் எனும் 9 வயதுடைய மாணவனே இவ்வாறு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 

விபத்தைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த மாணவன் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

​உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா தற்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை