மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்.!

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் நேற்று (12.06.2026) ஆம் திகதி மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

​கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் இந்த வருடத்திற்கான பெருவிழா ஆரம்பமானது. 

இதனைத் தொடர்ந்து, நேற்று(12.06.2026) வெள்ளிக்கிழமை அதிகாலை தீமூட்டுதல் வைபவம் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது.

​நேற்று மாலை நடைபெற்ற பிரதான தீமிதிப்பு நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

 அம்மனின் அருள் வேண்டித் திரண்ட பக்தர்களின் வருகையால் புன்னைச்சோலை கிராமமே ஆன்மீகக் கடலில் மூழ்கியிருந்தது.
புதியது பழையவை