அக்கரைப்பற்று விபுலானந்தர் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின்  “பாலர் விளையாட்டு விழா (18.06.2026) அக்கரைப்பற்று  ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான முன்றலில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கைலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் பங்கேற்று தமது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதில் தேகபயிற்ச்சி, ஒட்டம், தடைகள் தாண்டுதல், கயிறு இழுத்தல், பலூன் ஊதி உடைத்தல் உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான போட்டிகள் இடம்பெற்றன.

இவ்விழாவுக்கு ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆரியதாசதர்மதாச, திருமதி சித்திரா தேவராஜன், சித்திவினாயர் ஆலய பிரதம தர்மகர்த்தா ஆர்.லோகிதராஜா, சிவசிறி சண்முகன் வசந்தன் குருக்கள் மற்றும் கல்வி சமூகம் துறைகளைச் சேர்ந்த பலரும், மாணவர்களின் பெற்றோர்களும்  கலந்துகொண்டதுடன் அதிதிகளால் மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புதியது பழையவை