2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களை கோருவதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழி (Online) மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பக் கோரல் நடைமுறை நேற்று (09.06.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாகும் எனவும் இலங்கை பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.