மட்டக்களப்பு துறைநீலாவணையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – வீதிகளில் குப்பை கொட்டினால் சட்ட நடவடிக்கை .!

நாட்டிலே தீவிரமாக டெங்குநோயாளர்களின் தொகை அதிகரித்து வருவதுடன் டெங்கினால் இறப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பிலே டெங்கு நோயினால் இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதையடுத்து 
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் களுதாவளை பிரதேச சபை மற்றும் பிரதேச சுற்றாடல் பொறுப்பதிகாரியின் வழிகாட்டல் ஆலோசனையின் பிரகாரம் துறைநீலாவணைக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் சுற்றாடல் பொலிசார்,டெங்கு பரிசோதனை உத்தியோகஸ்தர்கள்,துறைநீலாவணை தெற்கு-1 கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நல்லதம்பி-சுசீலன் ஆகியோர்கள் இணைந்து துறைநீலாவணை கிராமத்தில் டெங்குஒழிப்பதை முன்னெடுத்தார்கள்.

இதன்போது  வீதிகள்,பொதுமக்களின் இருப்பிடங்கள்,வடிகால்கள்,தனியார் காணிகள்,அரச நிறுவனங்கள் முழுமையாக பார்வையிடப்பட்டு பரிசீலிக்கப்பட்டு டெங்கு குடம்பிகள் உருவாகுவதற்கான ஏதுவான இடங்களை வைத்திருப்போருக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுற்றாடலை தூய்மையாக வைக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டதுடன் வீடுகளில் சேமிக்கப்படும் குப்பைகளை வீதிகளில் போடுவதை தவிக்குமாறும்,எரிப்பதை நிறுத்துமாறும்,தங்களின் வீட்டுக்கழிவுகளையும்,உக்கமுடியாத கழிவுப்பொருட்களை மற்றவர்களின் காணிகளிலோ அல்லது வீதிகளிலோ,வடிகால்களுக்கு தூக்கி வீசுவதை தவித்து அவற்றை பிரதேச சபை வாகனங்களில் ஒப்படைத்து டெங்கு தொற்றுதலிருந்து விடுதலைபெறும் சமூகமாக இருப்பதற்கு துறைநீலாவணை பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் துறைநீலாவணை பிரதேசசபை உறுப்பினர் சு.இளமாறன் ஆகியோர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

எதிர்வரும் காலங்களில் துறைநீலாவணை வீதிகளில் குப்பைகளை வீசுவதால் வீசுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென கேட்டுக்கொண்டார்கள்.
புதியது பழையவை