மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை.!

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கூறி, சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவக் கட்டளையகம் இன்று(20.6.2026) எச்சரித்துள்ளது.


வொஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே எட்டப்பட்ட 14 அம்ச உடன்படிக்கையின்படி போர்நிறுத்தம் நீடிக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாக்ஸ் நியூஸ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விரைவில் தாம் சுவிட்சர்லாந்து செல்லவிருப்பதாகவும், தற்போதைக்கு ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு எதிராகவும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவுமே இந்த நீரிணை மூடப்படுவதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை