கிராமங்களில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு இலட்சக்கணக்கில் பணத்தை வழங்கி தன்னை அழைக்கும் படி ஒரு பக்கம் பேரம் உரிமை சார்ந்த விடயங்களில் ஒடி ஒளியும் மறுபக்கம் வாக்களித்த மக்கள் தான் பாவம் யாரா இருந்தாளும் ஊடகம் தன் கடமையை செய்யும் வாழ்க வளமுடன்
மட்டக்களப்பில் நடைபெற்ற வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருவதாக கூறிய இரண்டு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கைத் தொலைபேசியை அனைத்து விட்டு நிகழ்வை புறக்கணித்த சம்பவம் ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அண்மையில் எழுச்சிப் பாடல் ஒன்றை பாடியதற்காக கிளிநொச்சி இளைஞர் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று(07.06.2026) மட்டக்களப்பில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு எதிராக தடை விதிக்கப்படலாம், பாதுகாப்பு தரப்பினரால் குழப்பம் ஏற்படுத்தப் படலாம் என்ற அச்சம் காரணமாக பாராளுமன்ற சிறப்புரிமையை கொண்ட மக்கள் பிரதிநிதிகளான தங்களது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களோடு கூட இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்பாட்டாளர்கள் அழைத்திருந்தனர்.
ஆனால் நிகழ்வுக்கு வருவதாக கூறிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும். பின்னர் தங்களது கைத் தொலைபேசியைகளை அனைத்து விட்டு நிகழ்வை புறக்கணித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.